சமையல் தொழிலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.50 ஆயிரம் நிதியுதவி

Tamil nadu
By Manchu Jun 11, 2026 07:50 AM GMT
Report

பெண்கள் சமையல் தொழிலில் சாதிப்பதற்கு மத்திய அரசு திட்டம் ஒன்றின் மூலமாக ரூ.50 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுவது பாமர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமையலில் சாதிக்கும் பெண்கள்

பெண்கள் சுயதொழில் மூலமாக பொருளாதார முன்னேற்றத்தினை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் மூலமாக ஹோட்டல், சாப்பாடு கடை, கேன்டீன், கேட்டரிங் போன்ற தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வங்கி கடன் வழங்கப்படுகின்றது.

ராகுல் காந்தி, டி.ராஜாவை சந்தித்த முதல்வர் விஜய்

ராகுல் காந்தி, டி.ராஜாவை சந்தித்த முதல்வர் விஜய்

பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிறு தொழில்கள் மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். உணவு தயாரிப்பு தொழிலில் முன் அனுபவம் பெற்றும், சுயதொழிலை தனியாக அல்லது கூட்டணியாக நடத்த வேண்டுமாம்.

சமையல் தொழிலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.50 ஆயிரம் நிதியுதவி | Women In Food Business Annapurna Yojana 50000 Loan

50 ஆயிரம் கடன் பெறுவது எப்படி?

மேலும் இத்தொழில் குறைந்தது ஒருவருடமாக செயல்பட்டு வருவது மிகவும் அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே கடன் தொகை வங்கியில் பெற்றிருந்தால் அதனை திருப்பி செலுத்தியதுடன், அதனால் கிடைக்கும் சிபில் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.50,000 கடனை 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இந்த திட்டம் மூலம் State Bank of India, Indian Bank, Indian Overseas Bank, Canara Bank உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வழியாக பெண்கள் நேரடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.