மகளிர் உலகக்கோப்பை : 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது இந்திய அணி
மகளிருக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதியில் இந்திய அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனர் டாமி பியூமண்ட் மற்றும் டேனியல் வியாட் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அதற்கு அடுத்ததாக வந்த ஜோடி கடைசி வரை நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
31.2 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
முன்னதாக, லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் படு தோல்வியடைந்தது.
எனினும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியை பெற்று 3 போட்டிகளில் 2 வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கியது.
இந்நிலையில், இன்று இங்கிலாந்து அணியுடம் மோதி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.