தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பெண்கள் விடுதிகள் : ஆர்.டி.ஐ சொன்ன பரபரப்பு தகவல்
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் விடுதிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவது ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது.
அனுமதி இல்லாமல் விடுதி
தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் படி அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெற வேண்டும்.
இந்த நிலையில் தனியார் ஊடக நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில், ‘தமிழ்நாட்டில் உள்ள 1,748 பெண்கள் தங்கும் விடுதிகளில் 1,155 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்துள்ளது.
ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்
சென்னையில் உள்ள 714 பெண்கள் தங்கும் விடுதிகளில், 31 விடுதிகள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 683 பெண்கள் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க ஒற்றைச் சாரள முறை அனுமதியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதி அமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.