ஒலிம்பிக் ஹாக்கியில் பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கியது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 

ஆனால் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக ஆடி 4 கோல்கள் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 3 -1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்