அரசியலில் பெண்களுக்கு இடம் கிடையாது - தாலிபன் அறிவிப்பு
தாலிபன்களின் புதிய அரசில் உயர்பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என அறிவித்துள்ளது.
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர் விரைவில் ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டி வருகின்றனர் .
இந்த நிலையில் ஆப்கானின் கத்தாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பாஸ் ஸ்டானேக்ஷா பிபிசியிடம் தெரிவித்துள்ள தகவலின் படி பெண்களுக்கு உயர் நிலையில் பொறுப்புகள் வழங்கப்படாது என்று கூறிய அவர், கீழ் நிலைப் பதவிகளில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த இரு தசாப்தங்களில் அரசில் பணியாற்றியவர்கள் யாரும் தாலிபன்களின் அரசில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் கூறினார். தாலிபன்களை இஸ்லாமிய அமைப்பில், பெண்களுக்கு இரண்டாம் நிலைப் பதவிகளை கிடைக்கும். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசுடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தாலிபன்கள் பேசியதற்கு முரண்பட்டதாக இருக்கிறது. அதிபர், பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்று அப்போது தாலிபன்கள் கூறினார்கள்.
அமைச்சர்களாகவோ, நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்று பேசினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் பின்வாங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அப்போது நடந்தது வரலாறு. இப்போது அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் முரண்பாடு.
தாலிபன்கள் இரக்கமற்றவர்கள், அவர்கள் மாறுவார்களா எனத் தெரியவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மார்க் மில்லி கூறியுள்ளார்.
எனினும் வருங்காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தாலிபன்களுடன் இணைந்து செயல்பட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.