அரிய வகை பெண்.. 2 யூட்ரஸ்.. ஒரே சமயத்தில் பிறந்த 2 குழந்தைகள் - நெகிழ்ச்சி சம்பவம்!

China World
By Swetha Oct 01, 2024 05:59 AM GMT
Report

பெண் ஒருவருக்கு இரு கருப்பையில் ஒரே சமயம் குழந்தைகள் பிறந்துள்ளன.

2 யூட்ரஸ்..

பெண்களுக்கு ஒரு கருப்பை இயற்கையாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் சீனாவில் லீ என்ற பெண்ணுக்கு உலகத்திலயே அரிய வகையான மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

அரிய வகை பெண்.. 2 யூட்ரஸ்.. ஒரே சமயத்தில் பிறந்த 2 குழந்தைகள் - நெகிழ்ச்சி சம்பவம்! | Women Has 2 Wombs Gave Birth 2 Childs At Same Time

அவருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் (Uterus didelphys)என்ற பாதிப்பு உள்ளது. இந்த நிலை உலகிலேயே வெறும் 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு இரு கருப்பை இயற்கையாகவே இருக்கும்.

பெண் ஒருவருக்கு 2 கருப்பை - இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்!

பெண் ஒருவருக்கு 2 கருப்பை - இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்!

 2 குழந்தைகள் 

இதனால் லீ என்ற பெண்ணுக்கு இரு கருப்பையில் ஒரே சமயம் கருவுற்று, அவற்றில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு கருப்பையில் ஆண் குழந்தையும் (3.3 கிலோ) மற்றொரு கருப்பையில் பெண் குழந்தையும் (2.4 கிலோ) எடையில் மிக ஆராக்கியமாக பிறந்துள்ளன.

அரிய வகை பெண்.. 2 யூட்ரஸ்.. ஒரே சமயத்தில் பிறந்த 2 குழந்தைகள் - நெகிழ்ச்சி சம்பவம்! | Women Has 2 Wombs Gave Birth 2 Childs At Same Time

இது குறித்து மருத்துவர் கூறும்போது "இந்த நிகழ்வு கோடியில் ஒருவருக்கு தான் நடக்கும். அதுவும் இயற்கை முறையில் கருத்தரித்த பெண் இரண்டு கருப்பையில் கர்ப்பம் ஆவது மிகவும் அரிது," என தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு சீனா மட்டுமின்றி சர்வதேச மருத்துவ உலகில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.