பிரபலமான வேலி; உள்ளாடையை கழட்டி தொங்க விடும் பெண்கள் - எதற்காக தெரியுமா?
நியூசிலாந்தில் உள்ள இரும்பு வேலி ஒன்றில் பெண்கள் தங்களின் உள்ளாடைகளை கழட்டி தொங்கவிட்டுவிட்டு செல்கின்றனர்.
பிரா வேலி
நியூசிலாந்து நாட்டின் கார்டோனா என்ற பகுதி பிரா வேலி காரணமாக மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் அங்கு வரும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழட்டி அங்குள்ள கம்பி வேலியில் தொங்கவிடுகின்றனர்.
இப்படி உள்ளாடையை தொங்கவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் வாழ்க்கை துணையாக கிடைப்பார் என்பது பெண்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளமாகவே பிரா வேலி மாறியுள்ளது.
வெளிநாட்டு பயணிகள்
முதன்முதலில் கடந்த 1999-ம் ஆண்டு அங்கு 4 உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். நாளடைவில் ஏராளமான உள்ளாடைகள் அங்கு தொங்கவிடப்பட்டன. இதனை பார்த்த சில பெண்கள், அவர்களும் தங்கள் உள்ளாடைகளை தொங்கவிட்டனர்.
இவ்வாறு பெண்கள் அந்த வேலியில் உள்ளாடைகளை தொங்கவிடுவது வழக்கமாகிவிட்டது. முன்னதாக அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்து வந்துள்ளனர். தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் இந்த பகுதிக்கு வந்து வேலியில் உள்ளடையை தொங்கவிட்டு செல்கின்றனர்.