வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை சீரழித்த கொடூர கணவன்..!

Uttar Pradesh
By Thahir Jul 30, 2022 09:22 AM GMT
Report

மனைவியின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை சீரழித்த கணவன்

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் கச்சேரி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் நண்பர்கள் கூட்டு சேர்ந்து சீரழித்ததாக புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் உறவினர்கள் அளித்துள்ள புகாரில் தங்கள் வீட்டு பெண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பின்னர் தனது கணவரும், மைத்துனரும் வரதட்சணையாக ரூ.2 லட்சமும், ஒரு காரும் கேட்டனர். அவர்களுக்கு வரதட்சனை கொடுக்காததால் தன்னை ஒரு அறையில் அடைத்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கொடுக்காததால் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை சீரழித்த கொடூர கணவன்..! | Women Gange Rape Dowry Issue

மேலும் ஒரு நாள் தனது கணவர் அவரது நண்பர் மூன்று பேரை அழைத்து வந்தார். தன் கணவர் அவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து தன்னை சேர்ந்து சீரழித்ததாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயற்சித்த போது தனது கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

காவல்துறை உறுதி 

இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் (ஏசிபி) மிருகங்க் பதக் கூறுகையில், தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,

விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து கணவர் தன் மனைவியை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.