தியேட்டரில் தீண்டாமை கொடுமை : பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணை துரத்திய ஊழியர்கள்
சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் டிக்கெட் எடுத்த மூவரை படம் பார்க்க அனுமதிக்காமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்துதல திரைப்படம்
சிம்பு நடித்துள்ள பத்துபல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது , இதனை முன்னிட்டு இன்று காலை 8 மணி முதலே சிம்பு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் . இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மூன்று பேரை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தீண்டாமை சம்பவம்
இத்தனைக்கும் அந்த 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்திருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இதனை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கினப்புறம் என்னடா இது @RohiniSilverScr pic.twitter.com/bWcxyn8Yg5
— Sonia Arunkumar (@rajakumaari) March 30, 2023
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தின் தலை நகரத்திலும் தீண்டாமையா என கொந்தளித்து வருகின்றனர்