படிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? - தாலிபான்களுக்கு பாடம் நடத்த தயாராகும் ஆசிரியர்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை எதிர்க்கும் வகையில் ஆசிரியர்கள் அதிரடி முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால் அங்கு தாலிபான் தீவிரவாதிகள் உள்நாட்டு போர் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு மக்கள் வாழவே அச்சப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் அங்கு பெண்களின் உரிமை, சுதந்திரம், வேலை வாய்ப்பு ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளது. அதேசமயம் தாலிபான் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டாலும் அங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருபாலர் கல்வி முறைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலிபான்கள் தங்களை கொன்றாலும் பரவாயில்லை. பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஆப்கான் நாட்டை சார்ந்த ஆசிரியர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தன்னார்வ அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பெண் கல்வி தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.