பெண்ணின் ஆடைகளை கிழித்து, அந்தரத்தில் தூக்கிப் போட்டு அட்டகாசம் - அதிர்ச்சி வீடியோ!
பாகிஸ்தானில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்த பெண்ணை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து ஆடைகளை கிழித்தெரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று இக்பால் பூங்கா அருகே நண்பர்கள் 6 பேருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த டிக்டாக் பிரபல பெண்ணை திடீரென ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு நடுரோட்டிலேயே வலுக்கட்டாயமாக இழுத்தும், ஆடைகளை கிழித்தும் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
மேலும் விடாமல் அந்த பெண்ணை தூக்கி தூக்கி வீசியும், வளையல்களை உடைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க பொதுமக்கள் போராடியபோதும், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Talibanisation of Pakistan in process !
— Rahul Jha (@JhaRahul_Bihar) August 18, 2021
400 Pakistani Muslim men groping,beating & tearing cloth of 1 tiktoker Muslim girl in Lahore . What Taliban's are doing in Afghanistan
,these men have done at #MinarePakistan . pic.twitter.com/TkIj2E6urd