இந்த பெண்களுக்கு ரூ.1000 கிடையாது..! பணம் இப்படி தான் கொடுப்போம் - அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் யாருகெல்லாம் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
இந்த பெண்களுக்கு ரூ.1000 கிடைக்காது
80 லட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். செப்டம்பர் முதல் மார்ச் வரை ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை என்று கூறினார்.