தம்பியுடன் கார் ஓட்டி பழக சென்ற அக்கா.. திடீரென தடுமாறி ஆற்றில் பாய்ந்து பெண் பலி!
கார் ஓட்டி பழக சென்ற பெண் திடீரென மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை கார் பயிற்சி
சிதம்பரம் கீழ வீதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார், 52 வயதான இவர் அதே பகுதியில் மாலன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 46 வயது சுபாங்கி. இந்த தம்பதிக்கு ஷியாம் என்ற மகனும் சோனா, மோனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இதில் சுபாங்கி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அவரது உறவினர் நாம்தேவ் என்பவருடன் சேர்ந்து கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது சுபாங்கி சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் நோக்கி ஓட்டி சென்றார், பின்னர் சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், எட்டுக்கண் மதகுபாலம் அருகே வந்தபோது கார் சுபாங்கியின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென உப்பனாற்றில் பாய்ந்தது. அது அங்கு பாய்ந்த வேகத்தில் ஆற்றில் மூழ்க தொடங்கியது. அங்கு காருக்குள் இருந்த நாம்தேவ் போராடி கதவை திறந்து வெளியேறிவிட்டார். சுபாங்கி வெளியே வர முயற்சி செய்தார், ஆனால் வர முடியவில்லை அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இந்த குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு வீரா்கள் சுமார் 2 மணி நேரம் போராடி காருடன் சுபாங்கியின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடலை அண்ணாமலைநகர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.