“டேய் நான் உங்க நண்பனோட காதலி விடுங்கடா” – கதறிய காதலிக்கு நிகழ்ந்த கொடூரம்!
நண்பனின் காதலியை ஒரு காட்டில் கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள மைந்தன் கர்ஹி பகுதியில் வசிக்கும் 22 வயதான அனுஜ் குமார் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் கடந்த ஆண்டு ஊரடங்கின்போது தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் தனியாக இருந்த அனுஜ் வேறொரு 30 வயதான பெண்ணை காதலித்து வந்தார்.
பிறகு அவருடைய நண்பர் ரம்ஜான் உதவியுடன் உத்தம நகரில் உள்ள அந்த பெண் ,அவரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்றார். பிறகு அந்த பெண் அனுஜுடன் ஒன்றாக வாழத் தொடங்கினார்.
பிறகு ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இந்த விஷயம் அனுஜின் முதல் காதலிக்கு தெரிய வந்தது .அதனால் அவர் தனது சொந்த ஊரிலிருந்து அனுஜை பார்க்க வந்தார்.
பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் அனுஜ் அவரின் இரண்டாவது காதலியை கொல்ல முடிவெடுத்தார்
அதனால் கடந்த ஞாயிற்று கிழமையன்று அனுஜ் அந்தப் பெண்ணை ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரின் நண்பர்கள் நவுஷாத் மற்றும் ரம்ஜான் ஏற்கனவே அங்கு இருந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரின் உடலை அங்கேயே விட்டுச் சென்றனர். பின்னர், அவ்ர்களே போலீசுக்கு போன் செய்து ,மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு
ஆண்கள் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று கொன்றதைப் பார்த்ததாக கூறி வர சொன்னார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர் .அந்த விசாரணையின் போது, போலீசார் அந்த பகுதியில் உள்ள
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, ரம்ஜானை விசாரித்தபோது அவர் தாங்கள் அந்த பெண்ணை கொன்றதை ஒப்புக்கொண்டனர் .