ஆதரவற்றோர் இல்லத்துக்கு சொத்து: உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்
தெலுங்கானாவில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத் மியாபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிந்துஜா(வயது 36).
மென்பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்த்த வந்த சிந்துஜா கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வந்தார், விவாகரத்தும் பெற்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிந்துஜா அலுவலகத்திற்கு வரவில்லை, போனில் தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர் ராஜ்ரெட்டி வீட்டிற்கு வந்து பார்த்த போது சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போது, விரைந்து வந்த அதிகாரிகள் சிந்துஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்ததில், தனது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்து விடுமாறு சிந்துஜா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
இதனைதொடர்ந்து சிந்துஜாவின் மரணத்திற்கான காரணம் குறித்து போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்கள் சபையில் இருக்க முடியாது : கொந்தளிக்கும் மொட்டுக்கட்சி IBC Tamil