ரயில் அருகே செல்ஃபி எடுக்க ஓடிய இளம்பெண்; நொடியில் நேர்ந்த விபரீதம் - ViralVideo

Viral Video Mexico Death
By Sumathi Jun 07, 2024 06:08 AM GMT
Report

ரயிலுக்கு அருகில் சென்று செல்பி எடுத்த இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

இளம்பெண் பலி

மெக்சிகோ, ஹிடால்கோ அருகே நீராவி இயந்திரத்துடன் கூடிய ’பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் இயங்கி வருகிறது. இது கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையும்.

mexico

இந்த ரயில், நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்யும். பின்னர் இந்த ரயில், ஜூலை மாதம் கனடா திரும்பும். அத்துடன் அங்கு அது ஓய்வு பெறும். எனவே இதனை புகைப்படம் எடுக்க பலரும் ஹிடால்கோ அருகே கூடினர்.

விதவிதமாக கேமராவில் கரடி எடுத்த 400 செல்பி...! - வைரலாகும் புகைப்படம்...!

விதவிதமாக கேமராவில் கரடி எடுத்த 400 செல்பி...! - வைரலாகும் புகைப்படம்...!

அதிர்ச்சி வீடியோ

ரயில் வருவதை செல்போனில் படம் எடுத்தனர். அதில், இளம்பெண் ஒருவர் ரயிலை ஒட்டி செல்பி எடுத்தார். அப்போது ரயில் மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உயிரிழந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும். அவருக்கு அருகிலேயே அவருடைய மகனும் உடன் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடந்து இதுகுறித்து கனடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி (CPKC) நிறுவனம், “இந்த சம்பவத்திற்கு வருந்துவதுடன், முழு விசாரணைக்கு காவல் துறையுடன் ஒத்துழைக்க விரும்புகிறது.

எனினும், ரயில் கடந்து செல்வதைப் பார்க்க விரும்பும் மக்கள், தண்டவாளத்திலிருந்து குறைந்தது 10 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால், அவரோ செல்பி மோகத்தில் அவரோ ரயிலுக்கு மிக அருகில் வந்ததே விபத்துக்குக் காரணம்” எனத் தெரிவித்துள்ளது.