கழிவு நீர் கலந்த குடிநீரை அருந்திய மக்கள்.. 20 பேர் மயக்கம், இருவர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி!

Tamil nadu Death Viluppuram
By Vinothini Sep 03, 2023 04:57 AM GMT
Report

கிராமத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததை அருந்திய இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. இதன் நடுவே செல்வதாகக் கூறப்படும் குடிநீர்க் குழாயில் கழிவுநீர் கலந்ததாகச் சொல்லப்படுகிறது.

women-dead-by-drinking-sewage-mixed-water

இந்த நீரைக் குடித்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்கள் கண்டமங்கலம், அரியூர், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள்;

புதுவை ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

பெண் உயிரிழப்பு

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளார், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். அறிக்கையில், "முண்டியம்பாக்கம்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்றுவந்த கடலூர்‌ மாவட்டம்‌ செல்வன்குப்பம்‌ பகுதியைச்‌ சேர்ந்த திருமதி.சியாமளா, சபெ சுப்பையா என்பவர்‌ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌ என்ற செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

women-dead-by-drinking-sewage-mixed-water

உயிரிழந்த திருமதி. சியாமளா அவர்களின்‌ கணவர்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கும்‌ உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதல்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்திரவிட்டுள்ளேன்‌" என்று குறிப்பிட்டுள்ளார்.