காதலனை கொன்று ஆணுறுப்பை சமைத்து சாப்பிட முயன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

america womanmurderherlover
By Petchi Avudaiappan Mar 03, 2022 06:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் காதலனை கொன்று ஆணுறுப்பை சமைத்து சாப்பிட முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உள்ள கிரீன்பே பகுதியில்  ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த ஒரு வாளியின் உள்ளே ஆணின் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்த வீட்டில் இருந்த நபரின் தலை என தெரிய வந்தது. மேலும் அவரை கடைசியாக அவரது காதலியுடன் சிலர் பார்த்துள்ளனர் என தெரியவந்ததால் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அதில் போதை பழக்கத்திற்கு அடிமையாகிய கொலை செய்யப்பட்டவரும், அவரது காதலியும் சம்பவ தினத்தில் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வீட்டில் உடலுறவு வைத்துள்ளனர். இதில் இருவரும் போதை தலைக்கேற என்ன செய்கிறோம் என்ற தெரியாத நிலையில் இருந்துள்ளனர்.

அப்போது போதையில் காதலி காதலனைக்  கொன்று அவரை துண்டுதுண்டாக வெட்டி வீட்டில் உள்ள உள்ள பாத்திரங்களில் போட்டு ஒவ்வொரு அறையாக உடலை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் இறந்தவரின் ஆணுறுப்பு ஒரு குக்கரில் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அப்பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.