ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட், 3 டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டவது போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி 2 - 0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், மக்கே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் களமிறங்கினர். ரேச்சல் ஹெய்ன்ஸ் 13 ரன்கள் எடுத்து இருந்த போது கோஸ்வாமி வீசிய பந்தில் ஷஃபாலி வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
அதை தொடர்ந்து வந்த கேப்டன் மெக் லேனிங் கோஸ்வாமி வீசிய பந்தில் கோஸிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமலே பெவிலியன் திரும்பினார்.
நிதானமாக ஆடிய அலிசா ஹீலி 35 ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து பெர்ரி 26 ரன்கள் சேர்த்த நிலையில் வஸ்திரக்கர் வீசிய பந்தில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
மூனே சிறப்பாக விளையாடி 64 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ரானா வீசிய பந்தில் போல்ட் அகி ஆட்டம் இழந்தார்.
கார்ட்னர் 62 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்த நிலையில் வஸ்திரக்கர் வீசிய பந்தில் ராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்ராத் 32 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 47 ரன்கள் எடுத்திருந்த போது வஸ்திரக்கர் வீசிய பந்தில் கோஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி, வஸ்திரக்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கார்ட்னர் 62 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்த நிலையில் வஸ்திரக்கர் வீசிய பந்தில் ராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்ராத் 32 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 47 ரன்கள் எடுத்திருந்த போது வஸ்திரக்கர் வீசிய பந்தில் கோஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதனை தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருத்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர்.
தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 59 ரன்கள் சேர்ந்த நிலையில் கார்ட்னர் வீசிய பந்தில் சதர்லேண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்த ஸ்மிருத்தி மந்தனா 25 பந்துகளில் 3 பவுண்டரிஉள்பட 22 ரன்கள் எடுத்த இருந்தார்.
பின்னர் வந்த யாஷ்டிஹா பாதியா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து விளையாடிய நிலையில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பெற்று தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.