காதலித்து கர்ப்பமாக்கி escape...பிரபல கிரிக்கெட் வீரர் மீது சென்னை பெண் புகார்
தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதிஷ் தற்போது ஏமாற்றிவிட்டதாக சென்னை பெண் புகார் அளித்துள்ளார்.
ராஜகோபால் சதிஷ்
டி.என்.பி.எல் தொடரில் அறிமுகமாகி பின்னர் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் சதிஷ். ஆல் ரவுண்டராக அறியப்படும் ராஜகோபால் சதிஷ் மீது சென்னையை சேர்ந்த பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றினார்
சென்னை பெருங்குடியில் தனியார் IT நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும் ராஜகோபால் சதிஷிற்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற ராஜகோபால் சதிஷ் தன்னுடன் பலமுறை தனிமையில் இருந்ததாகவும், பின்னர் ராஜகோபால் சதிஷுக்கு திருமணமான விஷயம் தெரிய வந்த நிலையில், அவருடனான உறவை இந்த பெண் முறித்து கொண்டுள்ளார்.
இருப்பினும் கடத்த ஆண்டு மீண்டும் இவர்களுக்கு இடையேயான பழக்கம் மீண்டும் ஏற்பட தற்போது அதன் காரணமாக இந்த பெண் தற்போது கர்ப்பமாகி இருக்கிறார்.
இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, நண்பர் சுரேகா ஆகியோர் தன்னை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாகவும் அடையாறு காவல் துணை ஆணையரை சந்தித்து அவர் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரில் அடிப்படையில் தற்போது தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.