ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலை கழகங்களில் பெண்கள் படிக்க தடை - தாலிபான்கள் அதிரடி
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலை கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்து தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் கல்வி பயில தடை
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் தாலிபான்கள் அரசு ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாலிபான்கள் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் பெண்கள் போராட்டங்களை நடத்தி வருகி்னறனர்.

இந்த நிலையில் தற்போது பல்கலை கழகங்களில் பெண்கள் கல்வி பயில தாலிபான்கள் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பெண்கள் பள்ளியில் கல்வி பயில தடைவிதித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.