கூலிப்படை வைத்து பெண்ணை அடித்து உதைத்த உறவினர் ; வீட்டை சூரையாடிய அதிர்ச்சி சம்பவம்
சொத்து தகராறு காரணமாக பெண்ணை உறவினரே கூலிப்படை வைத்து அடித்து உதைத்து வீட்டை சூரையடியாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டச்சிமங்கலம் அடுத்துள்ள உடையநாச்சி கிராமத்தில் ராஜேந்திரன்-லக்ஷ்மி என்ற முதிய தம்பதி குடும்பத்துடன் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் உறவினரான மல்லிகாவிற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லக்ஷ்மி வீட்டில் தனியாக இருந்தபோது மல்லிகா என்பவர் இருளப்பன், வடிவேல் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கூலிப்படை வைத்து லக்ஷ்மியை தாக்கி மண்டையை உடைத்துள்ளனர்.
மேலும் அவரகள் வசித்திருந்த கூறை வீட்டை சூறையாடி வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறிக்கினர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட லக்ஷ்மி கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வரஞ்சரம் காவல்நிலையத்தில் புகார் மணு அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என லக்ஷ்மி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக விரைந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசிற்கும் லக்ஷ்மி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.