சாலையில் நடந்து சென்ற பெண்ணின் முகத்தை பிளேடால் கிழித்த கொடூரம்!
சாலையில் சென்ற பெண்ணின் முகத்தை பிளேடால் கிழித்த வாலிபர்களை போலீஸ் கைது செய்தது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலின் எம்பி நகர் பகுதியில் வசிக்கும் 19 வயதான பெண்ணுக்கு நிறைய நண்பர்கள் சமூக ஊடகத்தின் மூலமாக இருந்தார்கள்.அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை ஒரு பர்த் டே பார்ட்டிக்கு கூப்பிட்டனர்.ஆனால் அந்த பெண் அந்த பார்ட்டியில் நிறைய ஆண்கள் வருவதால் அவர் வர மறுத்துள்ளார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த பிறந்த நாள் விழாவிற்கு அவரின் ஆண் நண்பர்களான சந்த்பாத்தை சேர்ந்த சலிம் என்ற சுமேர் மற்றும் ஜெஹாங்கிராபாத்தில் உள்ள ஜின்சியைச் சேர்ந்த ஆரிஃப் ஆகிய இருவரும் நேரில் வந்து அழைத்துள்ளனர் .ஆனால் அந்த பெண் அதற்கு வர விருப்பமில்லை என்று கூறியுள்ளார் . இதனால் அந்த நண்பர்கள் இருவரும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள் .அதனால் அந்த பெண்ணை பழிவாங்க சரியான நேரத்தினை எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
அதன் படி அந்த பெண் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த இரு நண்பர்களும் அந்த பெண்ணை வழி மறித்தனர் .பின்னர் அவரோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .அதன் பிறகு திடீரென்று தாங்கள் கொண்டு வந்திருந்த ப்ளேடை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் பலமுறை வெட்டினார்கள் .அதன் பிறகு அந்த பெண் அலறி துடிப்பதை பார்த்து அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர் .பின்னர் அக்கம்பக்கத்திலிருந்த பொது மக்கள் ஓடிவந்து அந்த பெண்ணை சிகிச்சைக்கு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர் ,அங்கு அவருக்கு முகத்தில் தையல் போடப்பட்டு சிகிச்சை நடைபெறுகிறது .பிறகு போலீசார் அந்த இரு வாலிபர்களை கைது செய்தனர் .