பெண் பத்திரிகையாளரிடம் எல்லை மீறிய நடிகர்....வழக்கு தொடுத்த மகளிர் ஆணையம்
மலையாள பிரபல நடிகர் அலென்சியர் லே லோபஸ் பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அலென்சியர் லே லோபஸ்
மலையாளத்தில் OTT தளத்தில் வெளியான "அப்பன்" என்ற படத்தில் படிக்கையில் படுத்தபடியே அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் தான் பக்கம் திரும்பியவர் நடிகர் அலென்சியர் லே லோபஸ். மலையாள திரைப்படங்களில் அதிகளவில் நடித்துள்ள இவர், ஃபகத் பாசிலின் தொண்டிமுத்தலும் திரஷாஷியும், மகேஷிண்டே பிரதிகாரம் போன்ற படங்களிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இந்நிலையில், இவர் 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 53-வது கேரள விருது விளங்கும் விழாவில் விருதை பெற்றுக்கொண்ட போது, பெண் சிற்பத்துடன் கூடிய இந்த விருதை கொடுத்து ஏமாற்ற வேண்டாம் என்றும் ஆளுமையுள்ள முதல்வர் உள்ள மாநிலத்தில், ஆணின் வலிமையுடன் கூடிய சிற்பம் அடங்கிய விருதை எங்களுக்குக் கொடுங்கள்" என பேச அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பெண் பத்திரிகையாளிடம் அத்துமீறல்
அதே போல விருதுடன் 25,000 ரூபாய்யை கொடுத்து அவமானப்படுத்தாதீர்கள் என கூறி, பரிசு தொகையை அதிகரிக்கவும் என அவர் பேச அதற்கு கேரள திரையுலகில் பணிபுரியும் பெண்களின் அமைப்பான விமன் இன் சினிமா கலெக்டிவ் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததிருந்தது.
இந்த சலசலப்புகள் முடிவடைவதற்குள் மீண்டுமொரு சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கின்றார். அதனை தொடர்ந்து சமீபத்தில் இது குறித்து இவரிடம் பேட்டி எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரிடமும் அலென்சியர் லே லோபஸ் தவறாக தகாத வார்த்தைகளை பயனப்டுத்தியதாக செய்திகள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக அவர் மீது கேரள மகளிர் ஆணையத்தின் தலைவர் பி.சதிதேவி தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் டி.ஷில்பாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.