சந்தேகப்பட்ட காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி - பொள்ளாச்சியில் பயங்கரம்

murder Coimbatore
By Petchi Avudaiappan Apr 06, 2022 06:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பொள்ளாச்சி அருகே மர்மமான முறையில் இறந்துபோன ஆண் குறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் குமார்  என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே வயிறு, மார்பு பகுதிகளில் காயங்களுடன் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவரது மகள் கனிமொழி  அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் குமார் மரணமடைந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் காவல்துறையினர் வினோத் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதால் தன்னைத் தானே வினோத் குமார் தாக்கிக்கொண்டதாகவும், வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். 

அதன்படி சம்பவ தினத்தன்று  மது போதையில் வீட்டிற்கு சென்ற வினோத் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் தனது மனைவியின் நடத்தையை சந்தேகித்து வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் நடைபெற்ற தகறாரில் கோபமடைந்த அந்த பெண் வினோத் குமாரை கடுமையாக தாக்கியதாகவும்,  கணவர் மரணமடையவே காவல்துறையில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அப்படி கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து  வினோத் குமாரின் மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.