பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த சம்பவம் - வெடித்த சர்ச்சை

Dharmapuri
By Sumathi Jan 05, 2026 07:52 AM GMT
Report

பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பனை விழா

தருமபுரி, ஆ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனை மரங்களுக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் 'பனை விழா' நடைபெற்றது.

பெண்கள், குழந்தைகளை கள் குடிக்க வைத்த சம்பவம் - வெடித்த சர்ச்சை | Women And Children Forced To Drink Kal

அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கள் இறக்கப்பட்டு படையலிடப்பட்டது. பின் அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்குக் கள் வழங்கப்பட்டது.

சர்ச்சை சம்பவம்

தொடர்ந்து சிறுவர்கள் கள்ளைப் பருகுவதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பேசிய பனைத் தொழிலாளர்கள், "கள் என்பது போதைப்பொருள் அல்ல, அது ஒரு சத்தான இயற்கை உணவுப்பொருள்" என்று கூறித் தங்கள் செயலை நியாயப்படுத்தினர்.

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி - 200 பேர் பாதிப்பு

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி - 200 பேர் பாதிப்பு

மேலும், கேரளாவைப் போலவே தமிழகத்திலும் கள் இறக்குவதற்கு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விழாவில், குழந்தைகளுக்கு கள் குடிக்க வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.