“மெட்டாவேர்ஸ் தொழில்நுட்ப தளத்தில் என்னை ஆண் அவதார்கள் கூட்டு பலாத்காரம் செய்தது” - பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

uk united kingdom metaverse virtual rape woman allege avatar rape
By Swetha Subash Feb 02, 2022 11:17 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

இங்கிலாந்தில் பெண் ஒருவர் மெட்டாவேர்ஸ் தொழில்நுட்ப தளத்தில் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பகிர்ந்திருக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண்மணி,

“நான் வாய்மொழியாகவும் , பாலியல் ரீதியாகவும் 3-4 ஆண் அவதார்களால் துன்புறுத்தப்பட்டேன்.

அடிப்படையில் ஆணின் குறல் கொண்ட அந்த அவதார்கள் வெர்ச்சுவல் முறையில் என்னுடைய அவதாரை கூட்டு பலாத்காரம் செய்தது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் குற்றம் சாட்டியிருக்கும் அந்த பெண் நிஜத்தில் காபுனி முயற்சிகளுக்கான மெட்டாவேர்ஸ் ஆராய்ச்சி என்னும் அதிவேக தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.