மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பங்கள்,டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டது.
உரிமைத் தொகை
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக வரும் 20-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்த சுற்றறிக்கையில்,தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அலுவலராக இருப்பர் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
முதல் கட்டமாக 1 கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டோக்கன் மற்றும் படிவங்கள்
இந்நிலையில், பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை இன்று முதல் தமிழகம் முழுவது வழங்கப்படுகிறது.
இதற்காக ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை கொடுத்து வருகிறார்கள். மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 98 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் படிவங்கள் மாற்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 1427 ரேஷன் கடைகளில் 700 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
3 நாட்கள் இந்த பனி நடைபெற்று பின்னர் முகாம்கள் மூலம் படிவங்கள் நிரப்பி பெறப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு படிவம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு வழங்கப்பட்ட படிவத்தை இன்னொருவர் பயன்படுத்த முடியாது. யாருக்கு படிவம் வழங்கப்பட்ட்து என்பதை ஊழியர்கள் பதிவு செய்து வருகிறார்கள். ரேஷன் கார்டை காண்பித்த பின்னரே படிவங்கள் வழங்கப்படுகிறது.
படிவங்களை குடும்பத்தில் உள்ளவர்கள் நிரப்பலாம். நிரப்ப தெரியாதவர்கள் 24ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று நிரப்பிக் கொள்ளலாம். அதன் பின்னர் படிவங்கள் பெறப்படும். வரும் செப்டெம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்த தலைவிகள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் தீவிரமாக உள்ளனர்.