பிரியாணியால் வந்த வினை; பெண்ணின் மண்டையை உடைத்த நபர்கள் - பரபரப்பு சம்பவம்!
புகார் அளித்த பெண்ணின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளிடம் புகார்
சென்னை பட்டினப்பாக்கம் பகுதிக்குட்பட்ட டுமிங் தெருவில், சிலர் சாலையில் வைத்து பிரியாணி சமைத்து அதனை கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அப்படி சாலையில் சமைக்கும்போது விறகடுப்பில் இருந்து வரும் அதிகப்படியான புகை அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் புகை மூட்டமாக காணப்படுவதாகவும் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மண்டை உடைப்பு
இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் சாலையில் வைத்து பிரியாணி சமைக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அப்பகுதி வாசிகள் புகார் அளித்த கீதாவின் மண்டையை அடித்து உடைத்துள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.