பூஜைக்கு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கொடூரம் - பகீர் பின்னணி
மாந்தீரக பூஜை செய்வதாகக் கூறி இளம்பெண்ணை கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாந்தீரக பூஜை
மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம்பெண். கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவரின் ட்டார் மாந்தீரக பூஜை போன்ற மூட நம்பிக்கை பழக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
மேலும், அகோரி பூஜை செய்வதாகக் கூறி அந்த பெண்ணை தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். குறிப்பாக அந்த பெண்ணை மாதவிடாய் காலத்தில் பட்னி போட்டு, அவரின் மாதவிடாய் ரத்தத்தை வலுக்கட்டாயமாக எடுத்து சென்றுள்ளனர்.
மாதவிடாய் ரத்தம்
அதை மந்திரவாதிகளுக்கு ரூ.50,000 விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அமைச்சர் சந்திரிகாந்த் பாடீல் பெண்ணுக்கு உரிய நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.