அடேங்கப்பா.. உலகிலேயே மிகப்பெரிய வாய் - பிரபலமான இளம்பெண்!
உலகிலேயே மிகப்பெரிய வாயை கொண்ட பெண் ஒருவர் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.
மிகப்பெரிய வாய்
அமெரிக்கா கெனக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமந்தா ரம்ஸ்டேல்(21). இவர் உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறிய வயதிலிருந்தே பெரிய வாயைக் கொண்டிருந்தார். அவரின் குடும்பத்தில் வேறு எவருக்கும் இது போன்ற வாய் இல்லை. வாயை முழுமையாக திறந்தால் இரு உதடுகளுக்கும் இடையிலான இடைவெளி 6.56 செ.மீ ஆக உள்ளது. அவரின் வாயை அகலமாக விரிக்கும் போது அதன் இரு முனைகளுக்கு இடையிலான நீளம் 10 செ.மீ உள்ளது.
கின்னஸ் சாதனை
இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். அதன்பின் 32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்கின்றனர். அண்மையில் அவர் பல் சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா தமது பல் சிகிச்சை நிலையத்துக்கு வருவதை அறிந்த ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து செங்கம்பளம் விரித்து அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, வாயை விரித்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் எதுவும் தேவை படவில்லை என மருத்துவர் எல்க் சேயுங் தெரிவித்துள்ளார்.
பிரபலமான பெண்
மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் டிக்டாக்கில் சமந்தா ரம்ஸ்டேல் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 27 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமந்தா கூறுகையில், பாடசாலையில் தனது பெரிய வாய் காரணமாக தான் கேலிக்கு ஆளானேன்.
ஆரம்பத்தில் தனது பெரிய வாய் குறித்து தான் கவலையடைந்த போதிலும் பின்னர் தான் அதை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ‘எனது வாய் காரணமாக நான் இந்தளவு பிரபலமாகுவேன் என நான் எண்ணியிருக் கவில்லை’ எனவும் சமந்தா ரம்ஸ்டேல் தெரிவித்துள்ளார்.