விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவிதை பாடி பாராட்டிய பெண்மணி
தரணி போற்றும் அளவிற்கு தமிழ் நாட்டை நடத்திச் செல்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கவிதை பாடி பாராட்டிய பெண்மணி
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கும் இந்திய ஒற்றுமை பயண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் இன்று புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்போது அதே விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்.
பின்னர் முதலமைச்சரிடம் அவர் கவிதை பாடினார் தரணி போற்றும் அளவிற்கு தமிழ் நாட்டை நடத்திச் செல்கிறீர்கள் என அப்போது அந்த பெண் புகழாரம் சூட்டினார்.
பின்னர் கவிதை பாடிய அந்த பெண்மணிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். கவிதை பாடிய பெண்மணியின் விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது பெண்மணியின் பெயர் கௌசல்யா என்பதும் அவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
1990ல் ஒரு மாணவியாக ஆயிரம் விளக்கில் மேடையேறி முழங்கினேன் இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன் என்று #முதலமைச்சர் @CMOTamilnadu முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 7, 2022
ஒரு பெரிய வங்கியில் அவர் இன்று மேலாளர்! pic.twitter.com/qE0ly1Zclz