மிக நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை - சோதனையை சாதனையாக மாற்றிய பெண் !

United States of America Guinness World Records World
By Jiyath Aug 14, 2023 04:39 AM GMT
Report

நீளமான தாடி வளர்த்து பெண்மணி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மிக நீளமான தாடி

அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்தவர 38 வயதான எரின் ஹனிகட். இவரின் உடம்பில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சனை உள்ளது. இதனால் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும்.

மிக நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை - சோதனையை சாதனையாக மாற்றிய பெண் ! | Woman Who Grew The Longest Beard Guinness Record

இதனால் எரினுக்கு தனது 13 வயதிலேயே முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு நாளுக்கு 3 முறை ஷேவிங் செய்தும், முடி அகற்றும் பொருட்களை பயன்படுத்தியும் தனது முகத்தில் வளரும் தாடியை எரின் கட்டுப்படுத்தி வந்துள்ளார். இருந்தும் முகத்தில் முடி வளர்ந்து கொண்டே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்தால் தூண்டப்பட்ட கண் பக்கவாதம் காரணமாக அவரது பார்வையை ஓரளவு இழந்த பிறகு, ஷேவிங் செய்வதை நிறுத்திவிட்டார். கோவிட்19 தொற்றுநோய் காரணமாக நாடுமுழுவதும் முடங்கிய நிலையில் தனது தாடியை வளர்க்க எரின் முடிவு செய்தார்.

கின்னஸ் சாதனை

இந்நிலையில் தற்போது தனது தாடியை 30 செமீ (11.81 அங்குலம்) வளர்த்து உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் எரின். இதற்கு முன் 25.5 செமீ (10.04 அங்குலம்) நீளமான தாடி என்ற சாதனையை 75 வயதான விவியன் வீலர் என்பவர் வைத்திருந்தார்.

மிக நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை - சோதனையை சாதனையாக மாற்றிய பெண் ! | Woman Who Grew The Longest Beard Guinness Record

இதனை இப்போது எரின் முறியடித்துள்ளார். பாக்டீரியா தொற்று காரணமாக அவரது கால்களில் ஒன்றின் கீழ் பாதி துண்டிக்கப்பட்டது உட்பட, எரினுக்கு குறிப்பிடத்தக்க உடல்நலப் போராட்டங்கள் இருந்தபோதிலும் இந்த சாதனை கிடைத்தது.