சிறுவர்களின் உடல் முழுவதும் சூடுவைத்த கொடுமைக்கார சித்தி - வேலூரில் பயங்கரம்

vellore childabuse
By Petchi Avudaiappan Aug 31, 2021 07:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

வேலூரில் கணவரின் முதல் மனைவி மகன்களின் உடம்பில் சூடு வைத்து சித்ரவதை செய்த சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்த கூலி தொழிலாளியான சேட்டு என்பவரும், ஈஸ்வரி என்பவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் (வயது 10), நித்திஷ் ( வயது 8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 2018 ஆம் ஆண்டு ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து குடியாத்தம் செதுக்கரைரை சேர்ந்த வேணி என்பவர் முதல் கணவரை பிரிந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சேட்டுவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது குடியாத்தம் பிச்சனூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் சேட்டு வேலைக்காக வெளியூர் சென்று விட்டால் இரவு தான் வீடு திரும்புவார். இதனைப் பயன்படுத்தி பகல் நேரங்களில் மகன்களை சித்தி வேணி கொடுமை செய்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கரண்டி மற்றும் கத்தியை சூடு செய்து முதுகு, கை, கால், ஆண் உறுப்பு என பல இடங்களில் சித்தார்த் மற்றும் நித்திஷ்க்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

சிறுவர்களின் உடல் முழுவதும் சூடுவைத்த கொடுமைக்கார சித்தி - வேலூரில் பயங்கரம் | Woman Was Arrested For Allegedly A Boy In Vellore

இந்த நிலையில் நேற்று காலை நித்தீஷ் வீட்டிலிருந்து தப்பித்து செதுக்கரை பகுதியிலுள்ள பெரியம்மா மரியா மற்றும் நிஷாந்தியிடம் சென்று தனக்கு சித்தி வேணி உடம்பில் சூடு வைத்ததை காட்டியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் குடியாத்தம் டவுண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வேணி, சித்தார்த்திடம் குடியாத்தம் டவுண் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.