ஆற்றின் மீது வலம் வந்த பெண்; சாமி என கும்பிட்ட மக்கள் - பின்னணி என்ன?

Viral Video Madhya Pradesh
By Sumathi Apr 11, 2023 10:56 AM GMT
Report

ஆற்றின் மேல் ஒரு வயதானப் பெண்மணி நடப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

பெண் சாகசம் 

மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் நர்மதை ஆற்றின் மேல் ஒரு வயதானப் பெண்மணி நடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்றின் மேல் நடந்து சென்ற பெண்ணைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்தப் பகுதிக்கு விரையத் தொடங்கினர்.

ஆற்றின் மீது வலம் வந்த பெண்; சாமி என கும்பிட்ட மக்கள் - பின்னணி என்ன? | Woman Walking On Narmada River In Mp Viral

நர்மதை ஆற்றிலிருந்து வெளிவந்ததும் அந்தப் பெண்ணை அனைவரும் நர்மதை தாய் என அழைத்து, அவரிடம் ஆசிபெற்றனர். இது அதிகம் பகிரப்பட்டதை தொடர்ந்து. போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

வைரல் வீடியோ

அதில், ஆற்றில் நடந்து சென்ற பெண், ஜோதி ரகுவன்ஷி என்பது தெரியவந்தது. ``நான் நர்மதாபுரத்தில் வசிக்கிறேன். 10 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, வேண்டுதலுக்காக நர்மதை ஆற்றில் வலம் வருகிறேன். அவ்வப்போது இங்கு வரும் பெண்களுக்கு நாட்டு மருந்துகளை வழங்கி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து போலீஸார், ``நர்மதை ஆற்றின் நீர்மட்டம், மணல் திட்டுகளால் மாறுபடுகிறது. எனவே, ஆழம் குறைவாக இருக்கும் இடங்களில் ஜோதி ரகுவன்ஷி நடந்தும், ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் நீந்தியும் சென்றிருக்கிறார்.

ஆற்றில் ஆழமானப் பகுதிகளுக்கு அவர் செல்லவே இல்லை. தற்போது அவரை அவரின் குடும்பத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனக் கூறியுள்ளனர்.