Monday, Apr 7, 2025

“உண்மையான சிங்கப்பெண் நீ தான் ஆத்தா”..பெண் சிங்கங்களுடன் ஒரு சிங்கப்பெண் ; வைரல் வீடியோ

woman africa viral video walking lioness group
By Swetha Subash 3 years ago
Report

சிறுவன் ஒருவன் காட்டில் வன விலங்குகளுடன் வாழ்ந்து வளருவதை கதைக்கருவாக கொண்டு அனைவரது பாரட்டையும் பெற்று சூப்பர்ஹிட் அடித்த படம் மௌக்லி.

அது போல கதையாக இல்லாமல் நிஜத்தில் பெண் ஒருவர் செய்த காரியம் வைரலாக பரவி வருகிறது.

சிங்கக் கூட்டத்துடன் காட்டுப் பாதையில் பெண் ஒருவர் உலா வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தான் அது.

இன்ஸ்டாகிராமில் சஃபாரி கேலரியால் பகிரப்பட்ட இந்த வீடியோ தான் தற்போதைய ட்ரெண்டிங்.

ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாக அறியப்படும் இந்த வீடியோ பதிவில்,  ஒரு பெண், பெண் சிங்கங்களின் குழுவுடன் நடந்து செல்வதைக் காணமுடிகிறது.

வீடியோ தொடரும் போது, அந்த ​​பெண் சிங்கங்களின் பின்னால் நடந்து சென்று ஒரு சிங்கத்தின் வாலையும் பிடித்துக் கொள்வதாக பதிவாகியுள்ளது.

மேலும், "உன் உயிரைப் பயமுறுத்தும் ஒரு காரியத்தை அவ்வப்போது செய். இதை முயற்சி செய்வாயா?" எனவும் கேப்ஷன் இடப்பட்டுள்ளது.