“கணவன் விற்பனைக்கு“ - இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெண்
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை இணையம் மூலம் விற்பனைக்கு முயன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்கு பின் பலரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக தொழில் தொடங்கியுள்ளனர். பொருட்கள் விற்பனைக்கு அதிகப்படியாக ஆன்லைன் பயன்படுத்தும் இந்த காலகட்டத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயான லிண்டா மெக்அலிஸ்டர் என்ற பெண் தனது கணவர் ஜான் மெக்அலிஸ்டரை ஏல தளத்தில் 'டிரேட் மீ பாஃர் சேல் என்று குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளார். '
இதனை உண்மை என நம்பிய 10 பெண்களுக்கு மேற்பட்டோர் ஜானை வாங்க போட்டிப்போட்டு ஏலம் எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்திய மதிப்பில் ரூ.7, 500ஐ கடந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லின்டா உடனடியாக அவர் பதிவிட்ட போஸ்ட்டை நீக்கியுள்ளார்.
ஜான் அடிக்கடி என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு தனியாக மீன் பிடிக்க சென்றுவிடுகிறார். இரண்டு நாள் முதல் மூன்று நாள் வரை அவர் திரும்பி வருவதில்லை. அப்படி சில நாட்களுக்கு முன்பு, மீன் பிடிக்க சென்றுவிட்டார். அந்த கோபத்தில்தான் விளையாட்டாக அவரை விற்பதாக ஆன்லைனில் பதிவிட்டதாக லின்டா கூறியுள்ளார்.