ஆன்லைன் ஆர்டர் உணவுகள்,பொருட்களை பெற 200 மைல்கள் விமானத்தில் பறக்கும் பெண் - ஏன் தெரியுமா?
ஆன்லைன் ஆர்டர்களை பெற பெண் ஒருவர் 200 மைல்கள் விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.
ஆன்லைன் ஆர்டர்கள்
ஆன்லைன் ஆர்டர்கள் இப்போது நம் வீடு தேடியே வந்து விடுகிறது. அப்படி கிடைக்காவிட்டாலும் சிறிது தூரம் நடந்து சென்று எடுத்து வருகிறோம். ஒருவேளை நமது முகவரி மாறியிருந்தாலும் சில கிலோமீட்டர்கள் மட்டும் நாம் பயணிப்போம் அவ்வளவுதான்.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 200 மைல்கள் தாண்டி சென்று தனக்கான உணவுகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் போன்ற ஆன்லைன் ஆர்டர்களை பெற்று வருகிறார்.
200 மைல்கள் விமான பயணம்
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள போர்ட் அல்ஸ்வொர்த்த்தில் சலினா அல்ஸ்வொர்த் (25 என்பவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் இந்த இடத்தில் முறையான சாலை வசதி இல்லை. இங்கு பல்பொருள் அங்காடிகளோ, நல்ல உணவகங்களோ இல்லை. சலீனா வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் எல்லாவற்றிற்கும் நீண்ட தூரம் பயணம் செய்து பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இங்கு வெறும் 186 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். சுற்றுலா சீசனில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். 1940களில் சலினாவின் குடும்பம் இங்கு குடியேறியது. தனது முன்னோர்கள் நடத்திய விடுதியை இப்போது சலீனா கவனித்து வருகிறார். இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணியாக வந்த ஜாரெட் என்பவர் சலினாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் விமானத்தில் 200 மைல்கள் பயணம் செய்து நல்ல உணவுகளை உண்டும், ஷாப்பிங் நாள்களுக்கு சென்றும் வருகிறோம் என்று சலீனா தெரிவித்துள்ளார். தான் வசிக்கும் போர்ட் அல்ஸ்வொர்த் நல்ல அழகான இடம் என்றாலும் இங்கு வாழ்வது சவாலாக இருக்கும்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் அருகிலுள்ள ஏங்கரேஜ் நகரத்திலிருந்து சிறிய வகை விமானங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது என்றும் பனிகே காலங்களில் இங்கு நிலைமை இன்னும் கடினமாக இருக்கும் என்றும் சலினா கூறுகிறார்.