2 வீடுகளுக்கு இடையே உள்ள அரை அடி சந்தில் சிக்கிய மூதாட்டி - 3 மணி நேர போராட்டம்!

Chennai Viral Video
By Sumathi May 19, 2025 11:15 AM GMT
Report

2 வீடுகளுக்கு இடையே உள்ள சுவரில் சிக்கி தவித்த மூதாட்டி 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.

சிக்கிய மூதாட்டி

திருவொற்றியூர், மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி (60). இவருக்கு திருமணமாகாததால் உறவினருடன் வசித்து வருகிறார்.

பொம்மி

உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டதால் பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக் ஈரமாக இருந்ததால், அதை மொட்டை மாடியில் காய வைத்துள்ளார்.

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் - தமிழ்நாட்டில் 18 பேர் பாதிப்பு

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் - தமிழ்நாட்டில் 18 பேர் பாதிப்பு

 3 மணி நேர போராட்டம்

பின்னர் அதை எடுக்க சென்றபோது, 2 வீடுகளுக்கு இடையே உள்ள சுமார் அரை அடி சந்தில் தவிறி விழுந்துள்ளது. பொம்மி அதை எடுக்க பல வழிக ளில் முயன்றும் முடியாததால், சந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, மாப்பை எடுத்த மூதாட்டியால் திரும்பி வெளியே வர முடியவில்லை.

https://www.youtube.com/shorts/RXxf5rUXih4

இருவீடுகளுக்கு இடையே உள்ள அரை அடி சந்தில் சிக்கிக்கொண்டார். பின் பயத்தில் அவர் கூச்சல் போட்டதால் பக்கத்து வீட்டினர் வந்து அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி பொம்மியை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

அப்போது அவரை மீட் கும்போது முகம், முதுகு ஆகிய இடங்களில் லேசான சிராய்ப்பு, காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.