ஓடும் ரயிலில் இருந்த தள்ளிவிடப்பட்ட பெண் ...பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம்பெண் ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தின் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் மத்தியப்பிரதேச மாநிலம் கஜ்ராஹோவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா வரை செல்லும் பயணிகள் ரயிலில் ஏப்ரல் 27 ஆம் தேதி பயணம் செய்துள்ளார்.
சொந்த வேலையாக வந்துவிட்டு மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூரில் இருந்து சொந்த ஊரான பந்தாவுக்கு திரும்பியுள்ளார். ரயிலில் அப்பெண்ணின் அருகே இருந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவரிடம் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பெண் தடுக்க முயன்றாலும், அந்த நபர் விடாமல் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவரை தாக்கிவிட்டு இளம்பெண் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், கோபத்தில் அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளியுள்ளார். கஜ்ரஹோ அருகே உள்ள ராஜ்நகர் என்ற பகுதியில் அப்பெண் விழுந்த நிலையில் அப்பகுதி மக்கள் இவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.