பெற்ற குழந்தையை கரடி குழியில் தூக்கி வீசிய கொடூர தாய் - கடைசியில் நடந்த சம்பவம்
உஸ்பெகிஸ்தான் நாட்டில் பெற்ற குழந்தையை கரடி குழியில் தாய் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்டில் மிருகக்காட்சிசாலை ஒன்று உள்ளது. இங்கு ஒரு பெண் தனது 3 வயது மகளுடன் வருகை புரிந்துள்ளார். இந்த மிருகக்காட்சி சாலையில் சுமார் 16 அடிக்கு கீழே உள்ள அகழி கொண்ட கரடி வசிக்கும் குழி ஒன்று உள்ளது.
இதனுள் ஜூஜூ என்ற கரடியும் இருந்து வருகிறது. இதனிடையே மிருகக்காட்சிசாலைக்கு 3 வயது மகளுடன் வந்த பெண், திடீரென தனது குழந்தையை கரடி குழியில் தூக்கி வீசினார். அங்கு கூடி இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை குழிக்குள் விழுந்தவுடன் கரடி உடனடியாக குழந்தையை மோப்பம் பிடித்து பாய்ந்தது.
உடனடியாக் சுதாரித்த மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உடனடியாக சென்று குழந்தையை மீட்டனர். நல்லவேளையாக குழந்தையை கரடி தாக்கவில்லை. அதே வேளையில் கீழே விழுந்த வேகத்தில் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. ஊழியர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெற்ற மகளையே கொல்ல முயன்றது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
VIEWER DISCRETION IS ADVISED!
— Press TV (@PressTV) February 1, 2022
CCTV footage shows a woman throwing her daughter into a bear's enclosure in Uzbekistan's Tashkent Zoo.
The toddler was not harmed by the bear, but she was hospitalized with injuries due to the fall.
The woman’s motivation has remained unclear. pic.twitter.com/R5c4aDzSFA