பெரிய வேலை செய்றீங்கனு நினைப்பா? பேராசிரியருக்கு சரமாரியான செருப்படி - வைரலாகும் வீடியோ!

Viral Video Relationship
By Sumathi Aug 23, 2022 06:03 AM GMT
Report

ஒரு பெண் தனது கணவரான உதவி பேராசிரியரை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உதவி பேராசிரியர்

ஒடிசா, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக பணிபுரிபவர் அனில்குமார் திரியா. கடந்த சனிக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த அவரது மனைவி அனில்குமாரின் அறைக்குள் சென்று கதவை அடைத்துள்ளார்.

பெரிய வேலை செய்றீங்கனு நினைப்பா? பேராசிரியருக்கு சரமாரியான செருப்படி - வைரலாகும் வீடியோ! | Woman Thrashes Husband Assistant Professor Video

தொடர்ந்து தனது செருப்பை கழற்றி அனில்குமாரை சரமாரியாக தாக்கினார். அப்போது, நீங்க பெரிய வேலை செய்கிறீர்கள் என்ற நினைப்போ? என்று கூறியவாறு தலை, முதுகு, கால் பகுதிகளில் தொடர்ந்து தாக்கினார்.

செருப்பால் அடித்த மனைவி

அப்போது அறைக்கு வெளியே நின்றிருந்த சக பேராசிரியர்கள் கதவை திறக்கும்படி வறுபுறுத்தியும் அந்த பெண் அனில்குமாரை தொடர்ந்து தாக்கினார். அதில் சிலர் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

பின்னர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பாதுகாவலர்கள் பேராசிரியர் அனில்குமாரை மீட்டனர். குடும்ப பிரச்சனை காரணமாகவே அனில்குமாரை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது மனைவி இவ்வாறு நடந்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் மனைவியின் இச்செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.