பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட காவலர் - அதிரடி உத்தரவு பிறப்பித்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு

sylendrababu tnpolice madhumitabaidya actionagainstofficer
By Swetha Subash Apr 15, 2022 11:28 AM GMT
Report

சென்னை ஈசிஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட காவலர் மீது துறைரீதியாக விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பகுதியை சேர்ந்த மதுமிதா பைத்யா என்பவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்தவுடன் தனது நண்பர் ஒருவருடன் ஈசிஆர் சீ-ஷெல் அவென்யூ பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவர் மதுமிதாவிடம் அநாகரிகமாக பேசி கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுமிதா, காவலர் தன்னிடம் அநாகரிகமான முறையில் பேசியதாகவும், தான் ஏதோ குற்றவாளி போல் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட இந்தியர்களை, குறிப்பிட்டு என்னை அவர் அவதூறாக பேசியதாகவும், காவலர்களுக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மதுமிதாவின் இந்த பதிவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள டி.ஜி.பி. சைலேந்திர பாபு, காவலரின் கடுமையான மற்றும் பொருப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.