கணவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக பழி தீர்த்த மனைவி!

Sexual harassment
By Petchi Avudaiappan May 31, 2022 07:52 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தெலங்கானாவில் கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அந்த நபரின் மனைவி கொடூரமாக பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த கோண்டாபூர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரது கணவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு படித்து வந்துள்ளார். இதேபோல் அவர் வசித்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இது காயத்ரியின் கவனத்துக்கு வந்ததும், அவர் இருவரையும் கண்டித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.  ஆனால்  அவருக்கு கோபம் குறையாததால் அந்தப் பெண்ணைப் பழிவாங்க  காயத்ரி முடிவுசெய்துள்ளார். இதனால் புகாரைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கலாம் எனக்கூறி அந்தப் பெண்ணை காயத்ரி கடந்த 26 ஆம் தேதி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

சிறிது நேரம் காயத்ரி வழக்கு தொடர்பாக பேசிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணை அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி நான்கு கூலிப்படை ஆட்கள் இருந்தனர்.

அவர்கள் அந்தப் பெண்ணின் வாயை துணியால் பொத்தி அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை காயத்ரி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து காயத்ரி உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.