4 குழந்தைகளுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியைச் சேர்ந்த கிரண் (வயது 35) என்ற இளம்பெண், தனது நான்கு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிதி நெருக்கடி
கிரணுக்கு திருமணமாகி சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகிய நான்கு பிள்ளைகள் இருந்தனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அவரை விட்டு பிரிந்து,
பல்வாஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியே பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக கிரணும், அவரது பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே வராததை கவனித்த அண்டை வீட்டார், வீட்டில் இருந்து வேறுபட்ட துர்நாற்றம் வீசியதை உணர்ந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
5 பேர் தற்கொலை
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்ததபோது, கிரணும் அவரது நான்கு பிள்ளைகளும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், நிதி நெருக்கடியில் சிக்கி, மனமுடைந்த நிலையில் கிரண் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.