120 சவரன், 25 லட்சம், கார் போதாது - வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

Marriage Crime Death Tiruppur
By Sumathi Aug 07, 2025 07:34 AM GMT
Report

புதுப்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை

திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரீத்தி - சதீஷ்வர்

அப்போது 120 பவுன் நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்.

இதனால் கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய ப்ரீத்தி, தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த அவர், தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்காவுடன் பழகிய 12ம் வகுப்பு மாணவன் - ஆத்திரத்தில் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்!

அக்காவுடன் பழகிய 12ம் வகுப்பு மாணவன் - ஆத்திரத்தில் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்!

பெண் தற்கொலை

ப்ரீத்தியின் கணவர் குடும்பத்தார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், கோரிக்கை விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

120 சவரன், 25 லட்சம், கார் போதாது - வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை! | Woman Suicide Tiruppur Demand Dowry Like Rithanya

இதனையடுத்து அவர்களிடம் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் தற்போது மற்றொரு பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.