காதலனுடன் Video Call: விபரீத முடிவெடுத்த இளம் வழக்கறிஞர்
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் காதலனுக்கு வீடியோ கோல் செய்துவிட்டு இளம்பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
இளம் வழக்கறிஞர்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் அனீஷா(வயது 25), வழக்கறிஞருக்கு படித்துள்ள அனீஷா, சென்னையில் உள்ள தனியார் சட்டம் ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார், பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காகவும் விண்ணப்பித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் அனீஷா, அடையார் பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அங்கு நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட நாளடைவில் காதலாக மாறியது.
விபரீத முடிவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நித்தியானந்தக்கு வீடியோ கோல் செய்துள்ளார் அனீஷா, தான் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். காதலன் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் கடைசியில் தோல்வியில் முடிந்தது.
உடனடியாக அக்குடியிருப்பின் காவலாளிக்கு போன் செய்து கூறியுள்ளார், அவர்கள் வீடு வீடாக சென்று சோதனை செய்து பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் அனீஷா.
பொலிசாருக்கு தகவல்
தொடர்ந்து குடியிருப்பின் பாதுகாவலர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், விரைந்து வந்த அதிகாரிகள் அனீஷாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அனீஷாவின் பெற்றோர் மற்றும் நித்தியானந்தத்திடம் விசாரணை நடந்து வருகிறது.