டேட்டிங்க்கு ரூ.30,000; அந்த உறவுக்கெல்லாம் இதுதான் கண்டிஷன் - பெண்ணின் நிபந்தனை!

Facebook
By Sumathi Sep 17, 2023 10:20 AM GMT
Report

டேட்டிங் செல்ல ரூ.30,000 செலவு செய்ய வேண்டுமென்ற பெண்ணின் நிபந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் 

ஜூலி என்ற பெண், பேஸ்புக்கில் தன்னுடைய டேட்டிங் விருப்பங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். ‘என்னை டேட் செய்வதற்கு நீங்கள் அழைக்கும் முன்பு சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

டேட்டிங்க்கு ரூ.30,000; அந்த உறவுக்கெல்லாம் இதுதான் கண்டிஷன் - பெண்ணின் நிபந்தனை! | Woman Strict Conditions For A Date Cost Rs30000

அதில் நான் லஞ்ச் அல்லது டின்னர் டேட்டுக்கு மட்டும் தான் வருவேன். அதுமட்டும் இல்லாமல் அது என்னுடைய ஷெட்யூளுக்கு பொருந்தி வர வேண்டும். இதையும் மீறி நீங்கள் பின்வருவனவற்றையெல்லாம் எனக்கு வழங்கினால் தான் டேட்டிங்கிற்கு ஒகே சொல்வேன்’.

பகீர் பட்டியல்

ரூ. 4000 மதிப்புள்ள கேஸ்/பெட்ரோல், ஏனென்றால் டேட்டிங் செல்லும் ஆணின் வாகனத்தை நம்பமாட்டேன். கிட்டத்தட்ட ரூ. 8000 வரை மதிப்புள்ள பேபி சிட்டர் அல்லது இரண்டு உணவுகளுக்கான தொகை ஷாப்பிங் செல்வதற்காக தோராயமாக $100 (ரூ. 8000) டேட்டிங் செல்ல புதிய ஆடை வாங்குவதற்கு தோராயமாக $100 (ரூ. 8000) பெடிக்யூர் செய்ய தோராயமாக $100 (ரூ. 8000) என ரூ.30 ஆயிரத்திற்கான பட்டியலை பகிர்ந்துள்ளார்.

டேட்டிங்க்கு ரூ.30,000; அந்த உறவுக்கெல்லாம் இதுதான் கண்டிஷன் - பெண்ணின் நிபந்தனை! | Woman Strict Conditions For A Date Cost Rs30000

மேலும், முதல் டேட்டிங் சென்ற உடனேயே பாலியல் உறவை வைத்துக் கொள்ள மாட்டேன். உணவகத்தில் சர்வருக்கு எந்த அளவுக்கு டிப் கொடுக்கிறார் என்பதன் அடிப்படையிலும் இரண்டாவது டேட்டிங்கிற்கு ஒப்புக் கொள்வேன். இதை பார்ப்பவர்களுக்கு நான் அதிகமாக டிமான்ட் செய்வது போல தெரியும்.

ஆனால் நான் இதையெல்லாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன், என்னுடைய லைஃப்ஸ்டைல் இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.