காவல்துறை வாகனத்தை தனியாக தடுத்து நிறுத்திய பெண்- வைரல் வீடியோ
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் தொடங்கிய நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி வருகின்றது.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் இன்று காலை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
Mumbai today
— 🪳Against Corruption (@akashuchani08) July 22, 2026
Girl stood in front of Mumbai police truck which detained students pic.twitter.com/nJv3FLl3qw
அப்போது, ஒரு பெண் தனியாக நின்று அந்த காவல்துறை வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார்.
இதனால், வாகனம் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தில் இருந்த மாணவர்கள் கீழே இறங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை வாகனத்தை தனி ஒருவராகத் தடுத்து நிறுத்திய அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.