பேச்சை நிறுத்திய காதலன்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திய பெண் - அதிர்ச்சி சம்பவம்!

Attempted Murder India Maharashtra
By Swetha Dec 30, 2024 04:00 AM GMT
Report

காதலன் பேச்சை நிறுத்தியதால் பெண் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 காதலன்.. 

 மகாராஷ்டிரா நாக்பூர் நகரில் உப்பல்வாடி பகுதியை சேர்ந்த காதலர் ஒருவர் தனது காதலியிடம் சில நாட்களாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். திடீரென பேசமல் தவிர்பதற்கு என்ன காரணம் என கேட்டு தெரிந்துக்கொள்ள தன்னுடைய சகோதரர், மற்றொரு ஆண் நண்பரை அழைத்து கொண்டு

பேச்சை நிறுத்திய காதலன்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திய பெண் - அதிர்ச்சி சம்பவம்! | Woman Stabs Boyfriend To Death For Not Talking

அந்த பெண் காதலரை சந்திக்க சென்றார். காதலரிடம், ஏன் பேசாமல் தவிர்த்து வருகிறீர் என கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில், பெண்ணுடன் வந்த சகோதரர் கத்தியால் அந்நபரை குத்தியுள்ளார்.

குத்திய பெண்

அவருடன் அந்த பெண்ணும் சேர்ந்து கொண்டார். இதில், அந்த காதலர் பலத்த காயமடைந்து கீழே சாய்ந்து விழுந்தார். இதன் பிறகு அவர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஒடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலரை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து,

பேச்சை நிறுத்திய காதலன்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திய பெண் - அதிர்ச்சி சம்பவம்! | Woman Stabs Boyfriend To Death For Not Talking

மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன்படி, போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தீவிர தேடுதலுக்கு பின்னர் குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.